கேரளா வெள்ளம்: உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய வீரர்
இடுக்கி: கேரளா வெள்ள மீட்புப்பணியின் போது கன்ஹையா குமார் என்ற பேரிடர் மேலாண்மை படை வீர்ர் தன் உயிரை பணயம் வைத்து ஒரு குழந்தையை காப்பாற்றி மக்களிடத்தில் ஹீரோ ஆகியுள்ளார்.
கேரளாவில் கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி அணையின் 5 நீர்வாயில்களும் திறந்து விட்டதையடுத்து அதை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்நிலையில் இடுக்கி அணை அருகே உள்ள செருத்தோனி பாலத்தின் மறுமுனையில் ஒருவர் குழந்தையுடன் பயத்துடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த பேரிடர் மேலாண்மை படை வீரர் கன்ஹையா சற்றும் தாமதிக்காமல் ஓடிச்சென்று காப்பாற்றி மறுமுனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அவர்களை காப்பாற்றி அழைத்து வந்த சிறு நிமிடங்களில் அந்த பாலம் உடைந்து கீழே விழுந்தது. இது அங்கு பலருக்கும் ஆச்சிரியத்தை எற்படுத்தியது.
இது பற்றி அவர் கூறுகையில் " அவர்கள் பாலத்தை கடக்க பயத்துடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன்.எனவே ஒடிசென்று உடனடியாக அவர்களை காப்பாற்றினேன்" என்று அவர் கூறினார்.
இது எனக்கு ஒன்றும் புதிது இல்லை. இந்த பணியில் எனக்கு 6 ஆண்டு கால அனுபவம் உள்ளது என்றார்.
அவர் பீகாரை சேர்ந்தவர் என்றும், சென்னை அரக்கோணத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும், தமிழ்நாடு, மேற்குவங்கம், ஆந்திர மாநிலங்களில் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவரை போலவே பேரிடர் மேலாண்மை படை காவலர்கள் 404 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications