பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரூ. 17 லட்சம் அபேஸ்- ஏமாற்றிய பெண்ணுக்கு வலைவீச்சு!
மும்பை: மும்பையில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரூபாய் 17 லட்சம் நகை, பணம் வாங்கி மோசடி செய்து தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே மேற்கு, கோட்பந்தர் பகுதியில் உள்ள பரமானந்த் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் அந்த பகுதியில் தன் கணவருடன் சேர்ந்து ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் நன்கு பழகினார்.
மேலும் இவர் தன் வீட்டருகில் வசிக்கும் ரவினா, சீதால், உஜ்வாலா ஆகியோரிடம் கடந்த ஒரு ஆண்டாக ரூபாய் 17 லட்சம் நகை, பணம் ஆகியவற்றை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயஸ்ரீ திடீரென தன் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார்.
ஜெயஸ்ரீ சொந்த ஊருக்கு ஏதேனும் அவசர வேலையாக சென்று இருக்கலாம் மீண்டும் திரும்பி வருவார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர் மாத கணக்கில் திரும்பி வராததால் ஜெயஸ்ரீ அவர்களை ஏமாற்றியதை அறிந்தனர்.
இதையடுத்து ரவினா, சீதால், உஜ்வாலா ஆகியோர் இந்த மோசடி குறித்து காசர்வாடி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீயை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications