நீட் வினாத்தாள் விற்பனை... ஜார்க்கண்ட்டில் 5 பேரை தூக்கிய பீகார் போலீஸ்- கைது 18 ஆக உயர்வு!
ராஞ்சி: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பேரை பீகார் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தேசியத் தேர்வு முகமையானது யுஜிசி நெட் தேர்வு முறைகேடுகளால் அத்தேர்வையே ரத்து செய்தது. அதேபோல நீட் நுழைவுத் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இதனிடையே பீகாரில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் ரூ30 லட்சம் முதல் ரூ40 லட்சம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் விற்பனை மூலம் தாம் பல கோடி ரூபாய் சம்பாதித்து சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவரே பீகார் மாநில அமைச்சர் ஒருவர்தான் எனவும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சிக்கந்தர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியின் உச்சமாக இருக்கிறது.
இப்பின்னணியில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பேரை பீகார் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீட் முறைகேடுகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications