நீட் தேர்வு அராஜகத்தின் உச்சம்.. கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றிய கொடூரம்!
கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
திருவனந்தபுரம்: நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 11 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதினர்.

நீட் தேர்வு கட்டுப்பாடு
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஏக கெடுபிடி
அதிகப்படியான சோதனை நடவடிக்கைய தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.

உள்ளாடைகள் அகற்றம்
தோடு, ஹேர்ப்பின், ஆகியவற்றை அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் முழு கை சட்டைகள் அரை கை சட்டையாக்கப்பட்டது. இதுவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் கண்ணனூரில் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

அராஜகத்தின் உச்சம்
தேர்வு எழுதும் அறைக்கு சென்ற மாணவிகள், திரும்ப வந்து உள்ளாடைகளை அளித்து விட்டு சென்றதாக ஊடகங்களில் பேட்டியளித்த பெற்றோர்கள் கூறினர். உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதியதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications