இந்தியா ஜனநாயக நாடானது நேருவால் அல்ல.. காங்கிரசில் யாருக்கும் வரலாறு தெரியவில்லை - பிரதமர் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மக்களவையில் காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு- வீடியோ

  டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

  இன்று அந்த உறுப்பினர்களின் உரைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தொடக்கத்தில் இருந்தே அவர் காங்கிரசுக்கு எதிராகப் பேசினார்.

  முக்கியமாக நேருவின் கொள்கைகளை குறித்துப் பேசினார். நேருவிற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  விளாசல்

  விளாசல்

  தொடக்கத்திலேயே அவர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசினார். காங்கிரஸ் கட்சி இவ்வளவு வருடம் கொஞ்சம் கூட நேர்மையான ஆட்சியைக் கொடுக்கவில்லை என்றார். முக்கியமாக காங்கிரஸ் இங்கு இருக்கும் மக்களைப் பிளவுபடுத்தி துண்டாடிவிட்டது என்று குறிப்பிட்டார்.

  நேரு இல்லை

  மேலும் ''நேரு மூலம்தான் இந்தியா ஜனநாயக நாடாக மாறியது என்று சொல்வது தவறு. அதற்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. இந்தியாவுடன் ஜனநாயகம் பின்னிப்பிணைந்து இருந்துள்ளது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  வரலாறு தெரியவில்லை

  வரலாறு தெரியவில்லை

  அதேபோல் ''காங்கிரஸ் கட்சியில் யாருக்குமே வரலாறு தெரியாதா?. வரலாற்றுப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். ஏன் இப்படி காங்கிரஸ் கட்சியினர் மோசமாக வரலாற்றை மாற்றுகிறார்கள்'' என்று நேரு குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசினார்.

  பிரதமர் பட்டேல்

  முக்கியமாக ''காங்கிரஸ் கட்சியில் அப்போது இருந்த உறுப்பினர்களின் விருப்பப்படி சர்தார் வல்லபாய் பட்டேல்தான் முதல் இந்திய பிரதமராகி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இருந்த பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சென்று இருக்காது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Prime Minister Modi says ''India did not get democracy due to Pandit Nehru, as Congress wants us to believe. Please look at our rich history. There are many examples of rich democratic traditions that date back centuries ago. Democracy is integral to this nation and is in our culture'' in Lok Sabha.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற