சர்தார் வல்லபாய் படேலை மதவாதி என விமர்சித்தார் நேரு: அத்வானி
டெல்லி: சர்தார் வல்லபாய் படேலை முன்னாள் பிரதமர் நேரு "மதவாதி" என விமர்சித்ததாக அத்வானி தமது ப்ளாக்கில் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் சர்தார் வல்லபபாய் படேல், ஒரு மதசார்பற்ற தலைவர் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சர்தார் படேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி, அத்வானி ப்ளாக்கில் சர்தார் படேல், நேரு பற்றிய கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

அதில், நாடு சுதந்திரம் அடைந்ததும் ஹைதராபாத்துக்கு ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக அப்போதைய பிரதமர் நேரு தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், ஹைதராபாத்தில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு நேரு பதில் அளிக்கையில் திடீர் என்று படேலைப் பார்த்து, நீங்கள் முழு மதவாதி உங்கள் பரிந்துரையை ஏற்கமாட்டேன் என்று கூறியதாக பதிவு செய்திருக்கிறார்.
நேரு படேலை மதவாதி என்று கூறிய கருத்தை இப்போது அத்வானி வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது. சர்தார் படேல் ஹிந்துத்வா ஆதரவு தலைவர் என்று காட்டிக் கொள்வதற்காக அத்வானி இதை வெளியிட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications