3 நிமிடத்தில் தொடர்பை இழந்து விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் பரிதாபமாக பலி
காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 3 நிமிடத்தில் தொடர்பை இழந்த நிலையில், சிவபுரி என்ற பகுதியில் ஏர் டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தளத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேபாளத்தின் தலைநகரான் காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸிக்கு செல்லும்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூத்த விமானியான அருண் மல்லா என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்படத் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் அலுவலக ஊழியர்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் சீனாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்ததாகவும், ரசூவாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் புதன்கிழமை பிற்பகல் 1.54 மணிக்கு புறப்பட்டுள்ளது. சூர்யாசவுர் என்ற பகுதியை அடைந்த பிறகு ஹெலிகாப்டர் சுமார் 1.57 மணிக்கு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்துள்ளது. இந்த விபத்தில் விமானி மற்றும் 4 பயணிகள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஜூலை 24 ம் தேதி திடீரென சறுக்கி விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications