நேபாள பிரதமர் ஒரு பைத்தியம்...அவரது ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும்...இந்து மதகுருக்கள் கோபம்!!
அயோத்தி: ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று அந்த நாட்டின் பிரதமர் சர்மா ஒலி நேற்று கூறியிருப்பதற்கு அயோத்தியில் இருக்கும் இந்து மதக்குருக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நேபாள ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கடவுள் ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் இந்தியா போலியான அயோத்தியை உருவாக்கி இருக்கிறது என்றும் நேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறி இருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக நேற்று இரவே பதிலடி கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அயோத்தியில் இருக்கும் இந்து மதகுருக்கள் ஒலிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ராமர் கோயில் டிரஸ்ட் உறுப்பினரான மஹந்த் திதேந்திர தாஸ் கூறுகையில், ''ராமர் இங்கிருக்கும் சராயு ஆற்றுக்கு அருகே பிறந்தவர். அயோத்தியை சேர்ந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்தியர்களுக்கு உள்ளது. சீதை நேபாளத்தைச் சேர்ந்தவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், ராமரை நேபாளி என்று கூறுவது தவறு. இவ்வாறு கூறிய ஒலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
''இந்து ராஜ்யமாக இருந்த நேபாளம் இன்று பாகிஸ்தான், சீனாவின் கைகளுக்கு சென்றுள்ளது. நம்முடைய இந்து மத புத்தகங்களில் சராயு ஆற்றின் கிழக்கே இருக்கும் பகுதி அயோத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் சராயு ஆறு இல்லை. அவ்வாறு இருக்கும்போது எப்படி ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று கூற முடியும். இன்னும் இரு மாதத்திற்குள் அவரது ஆட்சி கவிழும்'' என்று ராம் தல் டிரஸ்ட் உறுப்பினர் கல்கி ராம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மதகுருவான மஹந்த் பரம்மஹம்ச ஆச்சார்யா தெரிவித்து இருக்கும் செய்தியில், ''ராமர் உலகிற்கே சொந்தமானவர். நேபாள மக்கள் ஒலிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். ஒலி ஒரு பைத்தியக்காரர்'' என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications