"நேதாஜி தொடர்பான ஆவணங்கள் நேரு தொடர்பானது மட்டுமே அல்ல.. அதையும்விட நிறைய விஷயங்கள் உள்ளன"
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்கள் என்பவை நேருவுக்கும் அவருக்குமான பிரச்சனை மட்டுமே.. இதில் நிறைய விஷயங்கள் உள்ளதாக நாட்டின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவர் சி.டி. ஷகாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன். இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டி:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவணங்கள் தொடர்பான விவகாரம் என்பது நேருவுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை மட்டுமே அல்ல.. அதைவிட நிறைய விஷயங்கள் உள்ளது.
நேதாஜி தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக.. அல்லது சமூக ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்படும்.. அதனால் அந்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
இந்த விவகாரத்தில் நாட்டின் நலன் என்பது பிரதானமாக இருக்கிறது.. அதனால் அரசு நமக்கு அதை தெரிவிக்காது. அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடத்தில் உள்ளது. இந்த ஆவணங்களில் நிச்சயமாக ஏதோ சில விஷயங்கள் இருக்கின்றன.
அரசு ரகசிய ஆவணங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏற்படுத்திய அதிர்வுகளை நாம் பார்க்கிறோம். அரசுகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவும் மக்களையும் முடிவெடுக்கும் அதிகாரங்களில் இணைத்துக் கொள்ளவும் சில சமரசங்கள் அவசியமானது.
அதே நேரத்தில் இத்தகைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை, நாட்டின் தேவை ஆகியவை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications