ஐயோ.. நெஞ்சே பதறுதே! அலறும் 10 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் மிருகம் போல தாக்கிய ஆசிரியர்! ஷாக்
சண்டிகர்: வெறும் 10 வயதே ஆன சிறுவனை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் ரொம்பவே முக்கியமானவர்கள். மாணவர்களின் எதிர்காலத்தையே இந்த ஆசிரியர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. பல மாணவர்கள் ஆசிரியர்களால் வாழக்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.

பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என்ற போதிலும், சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாகவும் நடந்து கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
10 வயது சிறுவன்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது பள்ளி மாணவன் ஒரு ஆசிரியரால் டார்ச்சர் செய்யப்பட்டுள்ளான். இரு மாணவர்களை அழைத்து அந்த சிறுவனின் கை, கால்களைப் பிடித்துக் கொள்ள வைத்து அவர் இப்படி கொடூரமாகத் தாக்கியுள்ளார். பஞ்சாப் லூதியானாவில் இருக்கும் ஒரு பள்ளியில் தான் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த குழந்தையை இப்படி அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகி மாநிலத்தையே உலுக்கிய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த லூதியானா போலீசார் இந்த விகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொடூர தாக்குதல்: அந்த சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர், இது குறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்றும் அப்படிச் சொன்னால் பள்ளியில் இருந்து டிசி கொடுத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் பாவம் அந்த சிறுவனும் தனது வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், அந்த சிறுவன் நடக்கச் சிரமப்படுவதை அவரது தாயார் கவனித்துள்ளார். இதனால் ஸ்கூலில் என்ன நடந்தது என அவர் கேட்டுள்ளார்.
முதலில் சிறுவன் எதையும் சொல்லாமல் மவுனமாகவே இருந்துள்ளார். அதன் பிறகே பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த தாய், முதலில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஷாக் வீடியோ: இதற்கிடையே இரண்டு மாணவர்கள் பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியர் இந்த சிறுவனை கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அந்தளவுக்கு அப்பாவி சிறுவனை அந்த ஆசிரியர் மிருகம் போலத் தாக்குகிறார். அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக பெங்களூரில் நடந்த மற்றொரு ஷாக் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதில் மழலையர் பள்ளியில் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய ஆசிரியர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அப்போது ஒரு குழந்தையை அங்கிருந்த மற்றொரு குழந்தை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. மழலையர் பள்ளியில் குழந்தைகள் தனியாக விட்டுச் செல்வது எவ்வளவு தவறு என்பதைக் காட்டுவதாக அது அமைந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications