இந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கான புதிய தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானின் இந்திய தூதராக இருந்த சோஹேல் மெஹ்மூத் கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செயலாலராக நியமிக்கப்பட்டார் இதனையடுத்து இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் பதவி காலியாக இருந்தது

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் இந்தியா, சீனா உள்ளிட்ட 24 நாடுகளுக்கான புதிய தூதர்களின் நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார். அதில் இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நியமித்துத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தீவிரவாத முகாம்களை தாக்கியழித்து பதிலடி கொடுத்தும், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது அமைதிப் பேச்சுவார்த்தையும் தடைப்பட்டுள்ளது இந்நிலையில் தான் இந்தியாவுக்கான புதிய தூதரை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
தற்போது இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள மொயின் உல் ஹக் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெறிமுறைகளின் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டிற்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ள அனுபவம் அவருக்கு உள்ளது.
இந்நிலையில் மொயின் உல் ஹக் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நாடு. எனவே அதிகாரிகளுடன் கலந்து தீவிர ஆலோசனை செய்த பின்னரே மொயின் உல் ஹக்கிற்கு இந்திய தூதர் பொறுப்பை வழங்கியுள்ளோம்
விரைவில் டெல்லிக்கு வர உள்ள மொயின் உல் ஹக் சிறந்த முறையில் பாகிஸ்தானின் கருத்துகளை வெளிப்படுத்துவார் இரு நாடுகளுக்கிடையே அமைதி பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க இவர் தீவிர நடவடிக்கைகளை எடுப்பார் என கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications