மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் இலாகாக்கள்!

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக 3 துறைகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுடன்றத் தேர்தலில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று 16வது லோக்சபாவில் இடம்பிடித்தார். 2014 முதல் 2017ம் ஆண்டு வரை மத்திய தரைவழி மற்றும் கடல்வழி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.

New charges alloted to union minister Pon, Radhakrishnan

இதனையடுத்து 2017 முதல் நிதித்துறை மற்றும் கப்பல்துறையின் இணை அமைச்சராக இருந்து வருகிறார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கூடுதலாக துறைகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி செலவினங்கள், பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் சொத்து ஆவணங்கள் துறை பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் தனது பதவியை தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைக்காக ராஜினாமா செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+