செயற்கைக் கோள்களுக்கு இன்சூரன்ஸ்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.42 கோடி வருவாய்
டெல்லி: இஸ்ரோவின் செயற்கை கோள்களுக்கான காப்பீடு மூலம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.42 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஜிசாட்-7 மற்றும் இன்சாட்-3டி ஆகிய செயற்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கான பிரீமியம் தொகையாக ரூ.42 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையாக கருதப்படும் மங்கள்யான் செயற்கை கோளை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த செயற்கை கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டு அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறது. இந்த செயற்கை கோளுக்கு காப்பீடு எதுவும் செய்யப்படவில்லை.
உள்நாட்டில் இருந்து ஏவப்படும் செயற்கை கோள்களுக்கு இஸ்ரோ காப்பீடு செய்வதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications