திருப்பதி,வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்.. தமிழகத்திற்கு மேஜர் அறிவிப்புகள்..தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ரயில் சேவைகள் நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்கம், புதிதாக சில ஊர்களில் சில ரயில்களை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதேபோல் திருப்பதி, வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் சேவைகளையும் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே இந்த முறை வழக்கத்தைவிட அதிக அளவில் மக்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எந்தெந்த ஊர்கள் எல்லாம் இதனால் பயனடைய போகின்றன.எப்படி ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.புதிய ரயில் சேவைகள் என்னென் என்பதை இப்போது பார்ப்போம்

முதல் சூப்பர் விஷயமே திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற புன்னியஸ்தலங்களுக்கு போறவங்களுக்குத்தான்.. வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடைய புதிய ரயில்சேவையும், திருப்பதி - கொல்லம் இடையே புதிய ரயில் சேவையும் இனி இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி புதிய ரயில் : வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி புதிய ரயில்: திருப்பதி - கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்பட உள்ள புதிய விரைவு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கொல்லம் வரை இயக்கப்பட உள்ளது.

ரயில்கள் இணைப்பு : மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி - கரூர், சேலம் - கரூர் வழித்தடங்களில் தனித்தனியாக இயக்கப்பட்ட ரயில்களை ஒன்றாக இணைத்து, மயிலாடுதுறை - சேலம் வரை விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது. இதேபோல் பாலக்காடு - திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை இனிமேல் இயக்கப்படும்.

New trains to Tirupati, Velankanni.. Southern Railway major announcements for Tamilnadu

குருவாயூர் ரயில்: மதுரை தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் - புனலூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை - செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படுகிறது..

இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27-ம்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ம் தேதியன்றும் தனது சேவையை தொடங்க போகின்றன. இதன்படி, ரயில் எண். 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27-ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு அந்த ரயில் குருவாயூரை அடையும்.

New trains to Tirupati, Velankanni.. Southern Railway major announcements for Tamilnadu

மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ், குருவாயூரிலிருந்து 28-ம் தேதி காலை 5.50-க்கு புறப்படும், அன்று இரவு 7.50-க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+