இந்தியாவின் அடுத்த அட்டார்னி ஜெனரல் யார்?
டெல்லி: இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பதவி என அழைக்கப்படும் அட்டார்னி ஜெனரல் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்த தேடுதலை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
தற்போது அட்டார்னி ஜெனரலாக உள்ள முகுல் ரோகத்கி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. முகுல் ரோகத்கி தனது பதவியை தொடர விருப்பம் தெரிவிக்காத நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே அல்லது, ரஞ்சித் குமார் ஆகியோரில் ஒருவர் அடுத்த அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரோகத்கி பெயர் அப்பதவிக்கு கடந்த முறை பரிசீலிக்கப்படும் முன்பே சால்வே பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர் முன்கூட்டியே ஒப்புக்கொண்ட பணிகள் நிலுவையில் இருந்ததால் அப்போது சால்வேக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்படவில்லை.
ஹரிஷ் சால்வே சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் ஆஜராகி, பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியரான குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை பெற்றுத் தந்தவர்.
இதுதவிர தற்போது கூடுதல் சொலிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தா பெயரும் இப்பதவியிடத்திற்கு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications