தினகரனின் நண்பேன்டா மல்லி.. அசிஸ்ட்டண்ட் ஜனா.. டெல்லி போலீசாரின் அடுத்த கொக்கி ஆடிட்டர்?
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவைத் தொடர்ந்து மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தினகரனின் ஆடிட்டர் கைது செய்யப்படலாம் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக லஞ்ச பேரம் நடத்தினார் தினகரன் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் பணப்பரிமாற்றம் தொடர்பாக திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் மூலம் இந்திய தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் லஞ்ச பணம் கொடுக்க உடந்தையாக இருந்த டிடிவி தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டார்.

சிக்கிய ஜனா
மேலும், அவரின் உதவியாளர் ஜனார்த்தனத்தையும் போலீஸ் விசாரித்து கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைக்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சென்னையில் விசாரணை
சென்னையில் 3 நாட்கள் விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை தினகரன் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக பணப்பரிமாற்றத்திற்கு உதவிய ஹவாலா ஏஜென்ட்டுடன் நேரில் வைத்து தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, தினகரனின் வங்கி கணக்கு விபரங்களை அளிக்கவும் டெல்லி போலீஸ் உத்தரவிட்டு உள்ளது.

வங்கி கணக்குகள்..
டிடிவி தினகரனின் 5 எஸ்பிஐ வங்கி கணக்குகளின் விபரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் பெரிய அளவில் பணம் கைமாறியது அம்பலமாகியுள்ளது.

ஆடிட்டர் கைது?
இதனைத் தொடர்ந்து, தினகரனின் ஆடிட்டரை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். எந்தெந்த வங்கிகளில் இருந்து எவ்வளவு பணம் கைமாறியது? வங்கிக் கணக்கில்லாமல் கைமாறிய தொகை எவ்வளவு என்பது குறித்தெல்லாம் ஆடிட்டரிடம் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications