புல்வாமா தாக்குதல்:13500 பக்க என்ஐஏ சார்ஜ் ஷீட் தாக்கல்-மசூத் அசார் உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு
ஜம்மு: 40 ராணுவ வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட 17 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். படையினர் சென்ற வாகன தொடரணி மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தேசத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

13,500 பக்கம் குற்றப்பத்திரிகை
13,500 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார்தான் முதன்மை குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மசூத் அசாருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் மசூத் அசாரின் சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர், அம்மார் அல்வி, உறவினர் உமர் பரூக் ஆகியோரும் அடங்குவர்.

யார் இந்த உமர் பரூக்?
இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் உறவினரான உமர் பரூக், இந்திய விமானத்தை கந்தகாருக்கு கடத்திய பயங்கரவாதி இப்ராஹிம் ஆதரின் மகன். இந்தியாவுக்குள் ஊடுருவி புல்வாமா தாக்குதலை செயல்படுத்தியது உமர் பரூக்தான். காஷ்மீரில் 2019 மார்ச் மாதம் நடந்த மோதல் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் உமர் பரூக் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாதிகள் படங்கள்
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், மசூத் அசார் உள்ளிட்டோருடன் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியது, சமூக வலைதளங்களில் மேற்கொண்ட உரையாடல்கள் ஆகியவையும் சாட்சியங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளான உமர் பரூக், சமீர் அஹமத் மற்றும் அதில் அகஹமது தார் ஆகியோரது படங்களையும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. இணைத்திருக்கிறது.

என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இவர்களில் அதில் அகஹமது தார், வெடிகுண்டு நிரம்பிய காரை பாதுகாப்பு படையினர் வாகனம் மீது மோதிய தற்கொலைப்படை தீவிரவாதி. மேலும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 17 தீவிரவாதிகளில் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உமர் பரூக், முகமது கம்ரான் அலி, யாசிர் ஆகிய 3 பேர் பாகிஸ்தானியர்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications