பெண் துறவி சாத்வி பிரக்யா மீதான கொலை வழக்கைக் கைவிடுகிறது என்ஐஏ

இந்த வழக்கில் தவறானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சுனில் ஜோஷி. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலை வழக்கில் பிரக்யா சிங் உள்ளிட்டோரை முதலில் என்ஐஏ சேர்த்திருந்தது.
ஆனால் ஜோஷியைக் கொலை செய்ததாக லோகேஷ் சர்மா, ராஜேந்தர் பெஹல்வான் ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சம்ஜாதா ரயில்குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். சுனில் ஜோஷி, சாத்வி பிரக்யாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் ஜோஷி கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது என்ஐஏ.
மேலும் இந்த இருவருக்கும் உதவியதாக திலீப் ஜெகதாப், ஜிதேந்தர் சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் சமீபத்தில்தான் கைதானார்கள்.
இந்தக் கைதைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில்முக்கியக் குற்றவாளிகளும் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக என்ஐஏ அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் பிரக்யாவுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கவும் என்ஐஏ தீ்ர்மானித்துள்ளது.
ஜோஷியும், குண்டுவெடிப்ப வழக்கில் ஒரு முக்கியக் குற்றவாளிதான். அவருக்கும், லோகேஷ் சர்மா, பெஹல்வான் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறும் தனியாக இரு்துள்ளது.
இந்த வழக்கில் பிரக்யா தவிர ஹர்ஷத் சோலங்கி, வாசுதேவ் பார்மர், ஆனந்த் ராஜ் கட்டாரியா, பாஜக கவுன்சிலர் ராம்சரண் படேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க விரைவில் ம.பி. சிறப்பு கோர்ட்டில் மனு செய்கிறது என்ஐஏ.
பிரக்யா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பார்மர்,கட்டாரியா இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். சோலங்கி வேறு சில வழக்குகளில் சிக்கி சிறையில்தான் இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications