வாலாட்டிய பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வந்த ராணுவம்.. LOC பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின் இரவில் அமைதி
காஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக கடந்த 4 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் டிரோன்கள் சத்தமும், வெடிசத்தமும் என மக்களின் தூக்கத்தை கெடுத்தன. நீண்ட நாளுக்கு பின் இரவில் அமைதி நிலவியது. அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியது. ராஜஸ்தான் எல்லைப் பகுதியிலும் இதே நிலை ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த இருவாரங்களுக்கும் மேலாக பெரும் பதற்றம் நிலவியது. பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த 4 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் டிரோன்கள் சத்தமும், வெடிசத்தமும் என மக்களின் தூக்கத்தை கெடுத்தன.

ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் எல்லையில் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்த முயற்சித்தது. இதனால், பெரும் பதற்றம் நிலவியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகில் இருந்தே எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் ஆக்ஷனுக்கு பிறகாக போர் பதற்றம் ஏற்பட்டது.
இதனால், எல்லையில் கடந்த 4 நாட்களாக பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் மிரண்டு போன பாகிஸ்தான் இறங்கி வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புதல் ஏற்பட்டது. சனிக்கிழமை மாலை தாக்குதல் நிறுத்தம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
எல்லையில் இயல்பு நிலை
ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன. 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இருந்தது. பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்பினர். அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியது. ராஜஸ்தான் எல்லைபகுதியிலும் இதே நிலை ஏற்பட்டது.
இந்தியா தாக்குதல்
நேற்று இரவு எந்த ஒரு தாக்குதல் சத்தமும் இன்றி எல்லைக்கட்டுப்பாட்டு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதிகளில் அமைதி நிலவியது. சமீபத்திய நாட்களில் இரவில் நேற்றுதான் அமைதி நிலவியது என்று பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
40 வீரர்களை இழந்த பாகிஸ்தான்
இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது. எல்லையோரத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் 35 முதல் 40 வீரர்களை இழந்துஇருப்பதாக இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதலில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்தது. கடற்படை முக்கிய வெடி பொருட்களை வழங்கியது.
8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் பாகிஸ்தானின் ராணுவ டிரோன்கள், போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் வந்தன. ஆனால் பாகிஸ்தானால் இந்திய கட்டமைப்புகளை தாக்க முடியவில்லை. குறிப்பாக 9-ம் தேதி இரவில் நமது எல்லைக்குள் பாகிஸ்தானின் டிரோன்கள் அலை அலையாய் வந்தன. நமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருந்தன. ஜம்மு, உதம்பூர், பதன்கோட், அமிர்தசரஸ், ஜெய்சல்மார், டல்ஹசி ஆகிய நகரங்களில் டிரோன்கள் பறந்தன. அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.












Click it and Unblock the Notifications