மும்பை பயங்கரம்: குப்பை பொறுக்கும் விதவைப் பெண்ணை கற்பழித்த 9 பேர்

மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண்.
அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை கவனித்த வழிப்போக்கர்கள் இருவரும், டெம்போ டிரைவரும் அவரது நண்பரும் சென்ற பின்னர், அப்பெண்ணை அருகில் உள்ள வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
அடுத்தடுத்து 9 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்பெண் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து, அதே அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.
அப்பெண்ணிற்கு மாற்று உடை கொடுத்து, தேவையான முதலுதவி செய்ய உதவிய போலீசார், அப்பெண்ணை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள தடயங்களைச் சேகரித்தனர். அப்பெண் கூறிய தகவல்களின் அடிப்படையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்பெண் கொடுத்த தகவல்களின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 30-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications