மணிப்பூரில் குண்டுவெடிப்பு- 9 தொழிலாளர்கள் பலி- 20 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நேற்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இம்பால் புறநகரான நகமபல் பகுதியில் நேற்று காலை 7.45 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குண்டுவெடிப்புக்கு உள்ளூர் தீவிரவாத குழுக்களே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications