கேரளாவில் பரவிய நிபா வைரஸ் தமிழகத்திற்கும் வந்துவிட்டதா? மருத்துவர்கள் விளக்கம்
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தமிழகத்தில் எங்கும் பரவவில்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றுள்ளனர். கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, இதுவரை மொத்தமாக 14 பேர் இறந்து இருக்கிறார்கள்.
நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவும் நோயாகும்.வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் எதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள் சாப்பிட்டு இருந்தால், இந்த வைரஸ் தாக்கி இருக்கும் என்று கூறியுள்ளார். இது வேறு எப்படியெல்லாம் பரவுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கேரளா
இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தற்போது சாதாரண நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேரும் எல்லோருக்கும், இந்த நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூளையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் இதுவரை இந்த நோய் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இல்லை
இந்த நிலையில் தமிழகத்தில் நிபா பரவி உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. திருச்சியில் உள்ளவர்கள் சிலர் நிபா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் முழுக்க முழுக்க பொய், தமிழகத்தில் யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை என்று சுகாதரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

எச்சரிக்கை
ஆனாலும் தமிழகத்திலும் இந்த நிபா வைரஸ் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, மக்கள் பழங்கள் சாப்பிடும் போதும், ஜூஸ் குடிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது.

சோதனை தீவிரம்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பலர் வேலைக்கு செல்கிறார்கள். பலர் கட்டிட வேலை பார்க்க வேண்டும் என்று செல்கிறார்கள். இவர்களை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. வைரஸ் தாக்குதல் யாருக்காவது இருக்கிறதா என்று தீவிரமாக சோதனை செய்து வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications