பிரதமர் மோடியின் நிர்வாக "திறமையை" எக்ஸ்போஸ் செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி!
வலிமையான அரசியல் பெரும்பான்மை பெற்ற பிரதமர் மோடியின் நிர்வாக திறமை இதுதான் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரங்கள்.
Recommended Video

டெல்லி: விஜய் மல்லையாக்களும் நீரவ் மோடிகளும் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டே தப்பி ஓடியவை என்பது பிரதமர் மோடியின் ஆட்சி முறையின் லட்சணத்தைத்தான் அம்பலப்படுத்துகின்றன,
2014 லோக்சபா தேர்தலின் போது ஆட்சி நிர்வாக அமைப்பில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. இதுவரை இல்லாத வகையில் புதிய அரசு நிர்வாகம் செயல்படும் என நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகாலம் அத்தகைய நிர்வாக மாற்றங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக தீவிர இந்துத்துவா அரசியல் பேச்சுகள்தான் அதிகம் வெளிப்பட்டிருக்கின்றன.

நிர்வாகத்தில் ஓட்டை
இன்னும் சொல்லப் போனால் நாட்டை நிர்வகிக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, முழு நேர அரசியல்வாதியாக மட்டுமே களமாடி வருகிறார். இதற்கு முந்தைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அப்படி இல்லை.

அரசியல் மேடையாக நாடாளுமன்றம்
பிரதமராக இருந்த வாஜ்பாய் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தினார். இப்போதோ நாடாளுமன்றத்தையே அரசியல் மேடையாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இப்படி அரசியல்வாதியாக மட்டுமே பிரதமர் மோடி இருப்பதால்தான் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்டு வருகின்றன.

வங்கி மோசடிகள்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, கோத்தாரி என பலரும் வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டுகிறார்கள். விஜய்மல்லையா, நீரவ் மோடிகள் நாட்டைவிட்டே தப்பி ஓடுகிறார்கள். இது நிச்சயம் பிரதமர் மோடியின் நல்ல நிர்வாகி என்ற இமேஜுக்கு கடும் டேமேஜ் என்பதில் சந்தேகம் இல்லை.

நலல் நிர்வாகம் இல்லையே
மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியதை வைத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஏதோ ஏதோ செய்து அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது; தேசபக்தர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாஜக, தேசத்தின் நிர்வாகத்தை தூய்மையாக்குவதிலும் சீரமைப்பதிலும் படு தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது என்பது சந்தேகம் இல்லை.
இன்னும் எத்தனை நீரவ் மோடிகள் எந்த புற்றில் பதுங்கியிருக்கிறார்களோ?
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications