For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்து விட்டது பெண்களுக்கான துப்பாக்கி.. அத்துமீறினால் இனி டுமீல் டுமீல்தான்!

Google Oneindia Tamil News

லக்னோ: பெண்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அறிமுகமாகியுள்ளது. இந்தத் துப்பாக்கி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இளம் பாரா மெடிக்கல் மாணவி கொடூரமாக பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில்தான் இந்தத் துப்பாக்கியை கான்பூரைச் சேர்ந்த இந்திய ஆயுத தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. இந்தத் துப்பாக்கிக்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.

.32 ரிவால்வர்

.32 ரிவால்வர்

இது .32 போர் இலகு ரக ரிவால்வர் ஆகும். இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பெண்களுக்காகவே இதை தயாரித்துள்ளனர். இந்தியாவின் முதல் பெண்களுக்கான துப்பாக்கியாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

அரை கிலோ எடை

அரை கிலோ எடை

இதன் எடை அரை கிலோதான். டைட்டானியம் அல்லாய் மெட்டலில் தயாரிக்கப்பட்டது இது.

விலைதான் அதிகம்

விலைதான் அதிகம்

இதன் விலைதான் அதிகமாக இருக்கிறது. அதாவது ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 360 ஆகும். ஜனவரி 6ம் தேதி இது அறிமுகம் செய்யப்பட்டது.

20 புக்கிங்... 80 விசாரிப்புகள்

20 புக்கிங்... 80 விசாரிப்புகள்

இந்தத் துப்பாக்கியைக் கேட்டு இதுவரை 20 புக்கிங் ஆகியுள்ளனவாம். 80 பேர் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளனராம்.

பெண்களிடம் அதிக ஆர்வம்

பெண்களிடம் அதிக ஆர்வம்

துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ள பெண்கள் இந்த ரிவால்வரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். துப்பாக்கியை வாங்குவது தொடர்பான விசாரணைகளையும் கூட அதிக அளவில் பெண்கள்தான் செய்கின்றனராம்.

சின்னஞ்சிறிய துப்பாக்கி

சின்னஞ்சிறிய துப்பாக்கி

இந்தியாவிலேயே இதுதான் மிகவும் சிறிய துப்பாக்கியாம். கொண்டு செல்வதும் எளிதாக இருக்குமாம். பர்ஸ் அல்லது கைப்பையில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆறு ரவுண்டு சுடலாம்

ஆறு ரவுண்டு சுடலாம்

இந்தத் துப்பாக்கியில் 6 தோட்டாக்களை நிரப்பி ஆறுமுறை ரவுண்டு வரை சுடலாம். பின்னர் மறுபடியும் தோட்டாக்களை லோட் செய்துகொள்ள வேண்டும்.

அத்தனை பெண்களும் வாங்குவார்களா...

அத்தனை பெண்களும் வாங்குவார்களா...

இருப்பினும் இந்தத் துப்பாக்கியை அத்தனை பெண்களும் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. மனோ திடம், துணிச்சல் அதிகம் உள்ள பெண்கள்தான் இதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்களே ஜாக்கிரதை.. இனிமேல் வாலாட்டினால் பெண்கள் குறி பார்த்து சுடும் அபாயம் வந்து விட்டது.

English summary
Giving more power to women to defend themselves and as a tribute to December 2012 ganrape victim Nirbhaya, the Indian Ordnance Factory, Kanpur, has manufactured Nirbheek, a .32 bore light weight revolver, India's first firearm designed for women. At 500 grams, it is also the first IOF handgun made of titanium alloy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X