சர்ச்சையில் ராணுவ தளபதி- யார் எதையோ சொன்னதுக்கு என் கருத்து எதுக்கு? நிர்மலா சீதாராமன் சீற்றம்
ராணுவ தளபதியின் சர்ச்சை பேச்சுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என சீறிவிட்டார் நிர்மலா சீதாராமன்,
Recommended Video

லக்னோ: முஸ்லிம்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவத். ஆனால் ராணுவ தளபதி பேசியது குறித்து தாம் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீறியுள்ளார்.
"அஸ்ஸாம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அஸ்ஸாமில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) பாஜகவை விட கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. 1984 லோக்சபா தேர்தலில் பாஜக 2 இடங்களில்தான் வென்றிருந்தது" என்பது ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பேச்சு.

அகதிகள் இடம்பெயருதல்
மேலும் வங்கதேசத்தில் இருந்து அகதிகள் ஊடுருவல் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. அகதிகள் இடம்பெயருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பிபின் ராவத் கூறியிருந்தார்.

ராணுவ தளபதியின் அரசியல் பேச்சு
இப்பேச்சுக்கு ஏஐயுடிஎப் தலைவர் பக்ருதீன் அஜ்மல் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராணுவ தளபதியின் அரசியல் பேச்சு சர்ச்சையானது.

நிர்மலா சீதாராமனிடம் கேள்வி
இதனிடையே லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ராணுவ தளபதியின் பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

சீறிய நிர்மலா சீதாராமன்
இதற்கு, நான் எதற்கும் கருத்து சொல்ல மாட்டேன். யாரோ சிலர் எதைப் பற்றியோ பேசுகிறார்கள். அதற்கு நான் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும் என சீறியிருக்கிறார். ராணுவ தளபதி மீது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications