ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை ஜம்மு காஷ்மீர் என்.ஐ.டி. மாணவர்களில் சிலர் கொண்டாடிய விவகாரத்தில் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து என்.ஐ.டி. வளாகத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்.ஐ.டி.) மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதற்கு மாணவர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

NIT clashes in Srinagar : CRPF in campus after students lathi-charged by Police

இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால் என்.ஐ.டி. கல்லூரி தற்காலிகமாக மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே காஷ்மீரைச் சேராத மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்குமாறு மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் அதிகரித்தது. இதனால் பாதுகாப்புக்காக என்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+