கட்டுமானத்தில் உள்ள 29 சுரங்கங்களின் நிலை என்ன? நிதின் கட்கரி சொன்ன வார்த்தை! பிறந்த நம்பிக்கை
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் மீட்கப்பட்டிருப்பது மகிழச்சியளிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 18 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 18 நாட்கள் ஆகிவிட்டதால் தீவிர மனசோர்வுக்கு ஆட்பட்டிருந்தார்கள். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தது.
ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.
எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடினர். இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதாவது, "சில்க்யாரா சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் தலைமையிலான அனைத்து ஏஜென்சிகளும் இரவும் பகலும் பாடுபட்டு இதை சாதித்திருக்கின்றன. மீட்பு நடவடிக்கையில் உதவிய தொழிலாளர்களுக்கும் நன்றி. தற்போது கட்டுமானங்களில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறியுள்ளார்.
सिल्क्यारा टनल बचाव कार्य में शामिल सभी का धन्यवाद। #SilkyaraTunnelRescue pic.twitter.com/H8r0JsRELY
— Nitin Gadkari (@nitin_gadkari) November 28, 2023
நாடு முழுவதும் தற்போது 29 சுரங்க பாதைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தணிக்கை செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் இனி உத்தரகாண்ட் சுரங்க விபத்தை போல வேறு எங்கும் ஏற்படாது என்கிற நம்பிக்கையை பிறக்க செய்திருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications