‛‛பாஜகவை டென்ஷனாக்கும் நிதிஷ் குமார்’’.. காலையிலேயே இப்படியா? தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் பயணம்
பாட்னா: லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உதவியுடன் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று உள்ளது. இந்நிலையில் தான் காலையிலேயே நிதிஷ் குமார் தொடர்பான செய்திகள் பாஜகவினரை டென்ஷனாக்கி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மட்டுமே உள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் 32 தொகுதிகளில் பாஜக குறைவாக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திராவில் 16 தொகுதிகளிலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 சீட், கர்நாடகாவில் ஜேடிஎஸ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் தலா 2 இடங்கள் உள்பட மேலும் சில கட்சிகளும் வென்றுள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 235 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் 99 சீட்டுகளை கைப்பற்றி உள்ளது. இதனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியை பிடிக்க தயங்குகிறது. அதேபோல் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் உறுதியாக இருந்தாலும் கூட அந்த கூட்டணிக்கு 235 இடங்கள் தான் உள்ளது. பெரும்பான்மைக்கான 272 சீட் இல்லை.
இத்தகைய சூழலில் தான் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. அதேபோல் ‛இந்தியா' கூட்டணி தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த 2 ஆலோசனைகளும் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அதன்படி பாஜக தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க என்டிஏ கூட்டணியில் உள்ள பீகார் முதல்வரும் ஜேடியு கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
அதேபோல் ‛இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி கட்சியின் தலைவரும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் செல்ல உள்ளனர். இதற்கிடையே தான் நிதிஷ் குமாரின் செயல் பாஜகவுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகாரில் இருந்து நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒரே விமானத்தில் செல்ல உள்ளனர். இதுதான் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி கடந்த ஆண்டு வரை நடந்தது. அதில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு அவர்களின் கூட்டணி முறிந்தது. அதாவது கடந்த ஆண்டு பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா' கூட்டணியை உருவாக்குவதில் நிதிஷ் குமார் தான் முக்கிய பங்கு வகித்தார். அதன்பிறகு திடீரென்று நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் பீகாரில் காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார்.
இதனால் தற்போதும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நிதிஷ் குமார் கூட்டணியை முறிப்பதில் வல்லவர். கடந்த 4 ஆண்டில் மட்டும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி அதன்பிறகு இப்போது பாஜக கூட்டணி என மாறி மாறி முதல்வர் பதவியில் உள்ளார். இதற்கிடையே தான் ‛இந்தியா' கூட்டணி தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி ‛இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் அவர் முன்னாள் பார்ட்டனரான ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் டெல்லி செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications