2019 மக்களவை தேர்தலில் நிதிஷ்குமார் தான் பிரதமர் வேட்பாளர்.. சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவிக்குமா? என்று செய்தியாளர்கள் லாலு பிரசாத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அவர் "ஆமாம் நிச்சயமாக. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து பீகாரில் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது. இதனிடையே, நிதிஷ்குமார் தலைமையிலான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் திட்டமிடப்பட்டு வரும் மூன்றாவது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் பேசப்பட்டு வருகிறார். இதை லாலு தனது பதிலில் இன்று அங்கீகரித்துள்ளார்.
இதன்மூலம், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து லாலு விலகி விட்டார் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு தான் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் எனக் கூறி வந்தது நினைவு கூறத்தக்கது.
2019 தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுல்காந்தி மட்டுமே முக்கிய பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கருதப்பட்டது. நிதிஷ்குமார் தற்போது களத்தில் இறங்கியுள்ளதால் அது ராகுல்காந்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications