பீகாரில் நிதிஷ்குமார்தான் முதல்வர்.... மத்தியில் மோடி அரசையும் தூக்கி எறிவோம்: லாலு பிரசாத்
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக தொடருவார்; தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஒரு அணியை தொடங்கிவிட்டோம்.. மத்தியில் இருக்கும் மோடி அரசையும் தூக்கி எறிவோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
நாட்டை மதத்தின் பெயரால் கூறுபோட்டு வைத்துள்ளது பா.ஜ.க. பீகாரை மகாராஷ்டிரா, ஹரியானாவைப் போல நினைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.
நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவருக்கான பணியை செய்வதில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரசார பீரங்கியாகத்தான் செயல்படுகிறார்.
பீகாரில் நிதிஷ்குமாரே முதல்வராக நீடிப்பார். நாங்கள் ஒற்றுமையுடன் இருந்து பீகாரின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று இயக்கத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை தூக்கி எறியப் போகிறோம்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், பீகார் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி இது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று அணி தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். வெறுப்பு அரசியலுக்கு எதிராக பீகார் மக்கள் வாக்களித்துள்ளனர்.
எங்கள் வெற்றியை இந்தியாவே கொண்டாடுகிறது. மக்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் ஒற்றுமையாக இருந்து பூர்த்தி செய்வோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பலவீனமாக எதிர்க்கட்சி வேண்டும் என நினைப்பதில்லை. பீகார் தேர்தலில் என்ன நடந்திருந்தாலும் எதிர்க்கட்சிகளை மதித்து செயல்படுவோம்.
எங்கள் வெற்றியானது தேசிய அரசியலில் நீண்டகாலம் எதிரொலிக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications