மோடி அரசின் நீதிபதிகள் நியமன கமிஷன் அரசியல் சாசனத்துக்கு எதிரானது - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
டெல்லி: உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைத்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது; செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனால் நீதிபதிகளை நியமிக்க மூத்த நீதிபதிகளைக் கொண்ட குழுவான 'கொலீஜியம்' முறையே நடைமுறையில் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய கொலீஜியம் என்ற நீதிபதிகளை கொண்ட அமைப்பு கடந்த 1993ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.

இந்த கொலீஜியம் முறையிலான நியமனத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கொலீஜியம் முறைக்கு பதிலாக பிரதமர் தலைமையிலான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு உருவாக்கியது.
இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டன. இதன்படி பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அவரை அடுத்துள்ள 2 மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 2 முக்கிய நபர்களைக் கொண்டதாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 99வது பிரிவில் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்த நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் முறையே நீடிக்க வேண்டும் என்று அந்த வழக்குகளில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவையும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது.
FLASH: SC Constitution bench strike down NJAC. Collegium system to continue.
— ANI (@ANI_news) October 16, 2015 உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 மாதமாக இந்த வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்றது. இவ்வழக்கில் மத்திய அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் முகில்ரோத்கி, மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் நரிமன் உள்ளிட்ட பலர் ஆஜராகினர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த மாதம் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
அத்தீர்ப்பில்,
- நீதிபதிகள் நியமன ஆணையமானது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கிறது.
- மத்திய அரசு அமைத்துள்ள இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் செல்லாது.
- இந்த நியமன கமிஷனை அமைக்க வகை செய்யும் மத்திய அரசின் 99வது அரசியல் சாசன திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
- நீதிபதிகளைக் கொண்ட அமைப்பான கொலீஜியம் முறையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- இந்த வழக்கை கூடுதல் பெஞ்ச் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
4 நீதிபதிகள் எதிர்ப்பு
நீதிபதி கேகர் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இதில் நீதிபதிகள் கேகர், லோகுர் குரியன் ஜோசப், ஆதர்ஷ்குமார் கோயெல் ஆகியோர் நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பளித்தனர்.
ஆனால் நீதிபதி சேல்மேஸ்வர் மட்டுமெ நீதிபதிகள் நியமன முறை சரியானது என்று கூறினார். இதனால் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் மோடி அரசின் நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய கொலீஜியம் முறையை மேம்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவிக்க நவம்பர் 3-ந் தேதியன்று மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கேகர் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications