இன்று கர்நாடக பந்த்.. பஸ், ஆட்டோ, டாக்சி ஓடாது.. ஸ்தம்பிக்கப் போகும் பெங்களூர்! #KarnatakaBandh
பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு, இவ்வாண்டில் 4வது பொது வேலை நிறுத்த போராட்டத்தை இன்று சந்திக்க உள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் ஆட்டோ, டாக்சிகள் முற்றிலுமாக ஓடாது என தகவல் வெளியாகியுள்ளதால், பணியாளர்களும், நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் கையை பிசைகின்றன.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, கன்னட சங்கங்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில், இவ்வாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்படும் 4வது பந்த் இதுவாகும். இதனால் பெங்களூர் நகரம் ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளது.

1100 சங்கங்கள் ஆதரவு
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பந்த்துக்கு, 1100 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மால்களை மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

60 ஆயிரம் டாக்சிகள்
பெங்களூர் டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா கூறுகையில், சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் நாளைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

ஓலா, உபேர் சொல்வது
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகருக்கு பயணிகள் வர முடியாத அளவுக்கு அங்கிருந்தும் டாக்சிகள் இயங்காது என தெரிகிறது. இதனால் விமான பயணிகள் நிலை பரிதாபமாக உள்ளது. அதேநேரம், ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள், வழக்கம்போல தாங்கள் வாகனங்களை இயக்குவோம் என்று கூறியுள்ளனர்.

திரையுலகமும் பங்கேற்பு
ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவர் சா.ரா.கோவிந்து கூறுகையி்ல், நாளை எந்த ஒரு கன்னட படமும் ரிலீசாகாது, பட சூட்டிங் பணிகளும் நடைபெறாது என்று தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகள்
வாகனங்கள் இயக்கப்படாது என்பதால் பெங்களூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அனேகமாக விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் அது இரவில்தான் உறுதியாக தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications