66 ஆண்டுகளில் முதன்முறையாக... குடியரசு தின விழாவில் "ஒட்டகம்" கிடையாதாம்!
டெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள இந்தாண்டு குடியரசு தின விழாவில் ஒட்டக அணிவகுப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் ஒட்டகங்களுடன் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ஒட்டகங்களின் அணிவகுப்பு தவறாமல் இடம் பெற்று வந்தது.
1976ம் ஆண்டு முதல் ராணுவத்தினருக்கு பதிலாக எல்லை பாதுகாப்பு படையினர், ஒட்டகங்களில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க துவங்கினர்.

ஒட்டக அணிவகுப்பு...
அலங்கரிக்கப்பட்ட 54 ஒட்டகங்களில் ஓர் அணியும், 36 ஒட்டகங்களில் பல்வேறு வாத்தியங்களை இசைத்தபடி மற்றொரு அணியினரும் அணிவகுத்து வருவது வழக்கம்.

ரத்து...
ஆனால், இந்தாண்டு ஒட்டக அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவுக்கான ஒத்திகையில் ஒட்டக அணிவகுப்புப் பயிற்சி நடைபெறவில்லை என்பதே மேற்கண்ட தகவலுக்கு வலு சேர்க்கும் சான்றாக அமைந்துள்ளது.

மோப்ப நாய்கள் அணிவகுப்பு...
அதற்குப் பதில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பணிகளில் உள்ள மோப்ப நாய்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அணிவகுப்பும் பிரான்ஸ் ராணுவத்தினரின் பங்கேற்பும் இந்த அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.

விளக்கம் இல்லை...
கடந்த 65 ஆண்டுகளாக நடந்து வந்த ஒட்டக அணிவகுப்பு ஏன் இந்தாண்டு நடைபெறவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்தாண்டு இந்த ஒட்டக அணிவகுப்பு மட்டுமின்றி துணை ராணுவத்தைச் சேர்ந்த பல பிரிவுகளின் பங்கேற்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications