சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே “நோ” இனிப்புகள், பரிசுகள்!
வாகா: நாட்டின் 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து வாகா எல்லையில் ராணுவ வீரர்கள் இந்நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். எனினும், இந்திய, பாகிஸ்தான் வீரர்களுக்கிடையே இனிப்புகள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு சம்பிரதாயம் நடைபெறும்.

மாலையில் மீண்டும் தேசிய கொடி இறக்கப்படும். அப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், மக்களும் அங்குள்ள ஸ்டேடியத்தில் அமர்ந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஊக்கப்படுத்துவார்கள்.
இன்று சுதந்திர தினத்தன்று காலையில் அணிவகுப்பும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது வீரர்கள் நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.
எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான இப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கிடையே இனிப்புகளோ, பரிசுகளோ இந்த வருடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications