கஜூராஹோவில் இருந்து கிளம்பிய விமானத்தில் ஹைட்ராலிக் கசிவு இல்லை- ஏர் இந்தியா
டெல்லி: கஜூராஹோவிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்னர் அதில் ஹைட்ராலிக் லீக்கேஜ் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.
வாரணாசியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா 405 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்று மாலை 7:15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விமானத்தில் ஹைட்ராலிக் குறைபாடு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தின் சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது இருப்பினும் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றியபோது 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிளம்பியபோது விமானத்தில் ஹைட்ராலிக் குறைபாடு இல்லை என்றும், விமானத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும், பலத்த சத்தம் மட்டுமே ஏற்பட்டது என்றும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கஜூராஹோவில் இருந்து டெல்லி சென்ற விமானம் ஹைட்ராலிக் கசிவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சக்கரப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. ஆனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. 146 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எந்த ஒரு பயணியும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications