For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு: மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை! தமிழகத்தின் கடைசி நம்பிக்கையும் வீண்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு தயாராக இல்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியிலுள்ள நமது வட்டாரங்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர தயார் இல்லை என்பது தெரியவருகிறது.

No Jallikattu ordinance: Govt sources

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து மத்திய அரசு அறிவிக்கைவிட்ட நிலையில் அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதுகுறித்த வழக்கு விசாரமஐ நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தை மீறி செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வெளிவராது என தகவல் வந்துள்ள சூழலில் மத்திய அரசும் கைவிரித்துவிட்டதால், சட்டப்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழலில் தமிழக மக்கள் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு விசாரணையின்போது, பாரம்பரிய பழக்கம் என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைத்தது. குழந்தை திருமணமும் பாரம்பரிய வழக்கமாக இருந்ததுதான், அதற்காக அதையும் அனுமதிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எனவே நீதிபதிகளின் கருத்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பதாக கருதும் மத்திய அரசு, இதில் அவசர சட்டம் இயற்றி கண்டனம் பெற விரும்பவில்லை என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
The Union Government has decided that it will not come up with an ordinance allowing Jallikattu to be conducted during Pongal this year. Several political parties from Tamil Nadu have been urging the centre to come up with an ordinance to overcome the ban imposed on Jallikattu by the Supreme Court.Highly placed sources say that there is no chance of an ordinance being passed at this stage. The matter is sub-judice since the SC is seized off the matter. After the SC had imposed a ban on the sport, the centre had come up a notification allowing the sport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X