அலோபதி விவகாரம்: உங்க அப்பனால கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவ் சர்ச்சை பேச்சு
ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறை மீதான விமர்சன விவகாரத்தில் தம்மை யாராலும் கைது செய்ய முடியாது; உங்க அப்பாவால கூட என்னை கைது செய்ய முடியாது என இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராம்தேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய மருத்துவர் சங்கம், ராம்தேவ் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலையிட்டார்.

ஹர்ஷ்வர்தன் - ராம்தேவ்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா போராளிகளை அவமதிக்கும் வகையிலான ராம்தேவ் பேச்சு கண்டிக்கத்தக்கது. ராம்தேவ் தமது கருத்தை உடனே திருமப் பெற வேண்டும் என்றார். இதனையடுத்து ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் தமது கருத்தை திரும்பப் பெறுவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ரூ1,000 கோடி இழப்பீடு
ஆனாலும் பிரச்சனை ஓய்ந்துவிடவில்லை. இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை, ராம்தேவ் தமது கருத்துக்கு 15 நாட்களில் எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கு பதில் சொல்லாமல், ராம்தேவின் கூட்டாளியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவையே கிறிஸ்வத மதம் மாற்றமாக்க முயற்சிக்கிறார் என பகீர் புகார் தெரிவித்திருந்தது.

தேசதுரோக வழக்கு பதிய கோரிக்கை
இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி வழிமுறைகளைப் பின்பற்றியும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள்தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியே சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். ஆகையால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

என்னை கைது செய்யவே முடியாது- ராம்தேவ்
தற்போது ராம்தேவின் இன்னொரு சர்ச்சை பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராம்தேவை யாராலும் கைது செய்ய முடியாது.. உன்னால மட்டும் அல்ல.. உங்க அப்பனால கூட கைது செய்ய முடியாது என பேசுவதாக இடம்பெற்றுள்ளது. இது ராம்தேவின் குரல்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் இந்த மிரட்டல் சர்ச்சைப் பேச்சு கொரோனாவை தடுக்க உயிரை பணயம் வைத்து பணி புரியும் மருத்துவர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications