ராகுல் காந்தி என்ன பேசுகிறார் என்பது யாருக்குமே புரியலையே...: நரேந்திர மோடி
உதய்பூர்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் என்ன பேசினார்? யாருக்காக பேசினார்? என்பது காங்கிரஸ் கட்சியினர் உட்பட யாருக்குமே புரியவில்லை என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலஉதய்பூரில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக இங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பழங்குடி இனமக்கள் இங்கு தீரமுடன் போராடினர்.

அந்த பழங்குடி இனமக்களின் தேசபக்தி இன்றும் நமக்கு உத்வேகம் தரக்கூடியதாக இருக்கிறது. உதய்பூர் பிரசார கூட்டத்துக்கு என்னை அழைத்த வசுந்தரராஜே சிந்தியாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? யாருக்காக பேசுகிறார்? என்பது காங்கிரஸ் கட்சியினருக்குக் கூட புரியவில்லை... முசாபர்நகரில் இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று கூறினார் ராகுல். அவர்களது பெயரை கண்டிப்பாக ராகுல் காந்தி வெளியிட வேண்டும்.
ராகுலுக்கே இங்கே உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை..
அதனால்தான் யாருக்கும் சொல்லாமல் கோபால்கர் வந்து சென்றார்... ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசு மீது மனித உரிமைகள் ஆணையத்துக்கு நம்பிக்கை இல்லை.. சிறுபான்மையினர் ஆணையத்துக்கும் நம்பிக்கை இல்லை.. யாருக்குமே ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை.
அத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் தைரியமாக எந்த ஒரு அமைச்சரையும் சந்தித்துவிட முடிகிறதா? காங்கிரஸ் கட்சி 100 நாட்களில் விலையைக் குறைப்போம் என்றது. ஆனால் என்ன நடந்தது?
வெங்காய விளைச்சல் 5% குறைந்தது என்றால் விலையோ 1500 மடங்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
நாங்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனே சிபிஐயை அமைப்பை ஏவிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா வெற்றி பெற்று முதல்வராவது உறுதி என்றார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications