For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- ஜார்க்கண்ட்டில் பாஜகவுக்கு அதிக இடங்கள்: கருத்து கணிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு வரும் 25-ந் தேதி முதல் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

No party may get majority in J&K, BJP to emerge on top in J'khand: surveys

நியூஸ் நேசன் இந்தியா என்ற இந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 31 முதல் 36 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி 23-28 இடங்களையும் கைப்பற்றக் கூடும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி வெறும் 7 முதல் 11 இடங்களிலும் காங்கிரஸ் 8 முதல் 12 இடங்களிலும் வெல்லத்தான் வாய்ப்பிருக்கிறதாம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பாஜக 42-46 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 14 முதல் 18 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.

ஆனால் ஏபிபி நியூஸ்- நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி கட்சிகள் மொத்தமே 37 இடங்களைக் கைப்பற்றினாலும் ஆட்சி அமைக்க போராட வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனிப்பட்ட முறையில் 30 தொகுதிகளை வெல்லும்; ராஷ்டிரிய ஜனதா தளம் 23 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது அக்கருத்து கணிப்பு.

English summary
No party may get a clear majority in the upcoming Jammu and Kashmir assembly elections, an opinion poll by a news channel has claimed while two other surveys on Jharkhand polls show that BJP is likely to emerge on top in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X