இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல் வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது.: அத்வானி
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக மோடி சிறப்பாக பணியாற்றினாலும் இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல சிறந்த பிரதமர் யாரும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி குஜராத்தின் அகமதாபாத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

மோடிக்கு பாராட்டு
நரேந்திர மோடி பிரதமாராக பதவியில் சிறப்பாக செயல்படுகிறார். பிரதமருக்கான பொறுப்பை உணர்ந்து மோடி உழைக்கிறார். இதனால் உலகளவில் மக்களின் புகழைப் பெற்றுள்ளார்.
வெளியுறவு முக்கியம்
பிரதமர் நாட்டை திறம்பட ஆட்சி செய்தால் மட்டும் போதாது. மேலும், மற்ற நாடுகளோடு உறவுகளை உருவாக்குவது மிகவும் அவசியம். தேர்தலில் மக்களின் மனதை வென்றார்.
தயக்கம் இருந்தது..
தற்போது உலக அளவில் மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார். மோடி பிரதமராக வெற்றி பெற்றதும் என்ன நிகழப்போகிறது. மற்றவர்களுடன் எப்படி தொடர்பு வைத்துக்கொள்வார் என்று யோசனை இருந்தது.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
ஆனால், அவர் திறமையாக செயல்படுகிறார். அவர் மட்டுமல்ல.. மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்கிறார்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
வாஜ்பாய்தான் பெஸ்ட்
இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல் சிறந்த பிரதமர் யாரும் இல்லை. வாஜ்பாயை போல் வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது.
இவ்வாறு அத்வானி பேசினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications