ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறும் எண்ணமில்லை: காங்கிரஸ் உறுதி
டெல்லி: ஆட்சி அமைக்க ஆம் ஆத்மிக்கு அளிக்கப் பட்டுள்ள ஆதரவு உறுதியானது, மறுபரீசீலனை செய்யத் தேவையில்லை என காங்கிரஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு வரும் சனிக்கிழமை ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படும் என ஆம் ஆத்மி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு உண்டானது. காங்கிரசார் சிலர், டெல்லி மாநில காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மிக்கு அளிக்கப் பட்டுள்ள ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெறக் கூடும் என்ற செய்தி பரவியது.
இந்நிலையில்,ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்த ஆதரவு குறித்து மறு பரீசீலனை செய்ய போவதில்லை என காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications