அடுக்குமாடி குடியிருப்பில் நைட்டி,லுங்கி அணிந்து வெளியேற தடை! நொய்டாவில் நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு?
நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டி உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நொய்டா அமைந்துள்ளது. இது டெல்லிக்கு மிகவும் அருகே உள்ள பகுதியாகும். நொய்டா என்பது முக்கிய நகராக உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியேறி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் புதிது புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் அங்கு ஹிம்சாகர் எனும் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளுக்கு தாங்கள் விரும்பிய உடைகளை அணிந்து சென்று வந்தனர்.

இதற்கிடையே தான் கடந்த 10ம் தேதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் ‛‛குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தாங்கள் அணியும் உடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதனால் லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். எப்போதும் உங்களின் நடத்தை, உடையில் சிறப்பு கவனம் தேவை. ஆட்சேபிக்கும் வகையில் யாரும் நடக்க கூடாது. இதனால் வீட்டுக்குள் பயன்படுத்த வேண்டிய லுங்கி, நைட்டி உள்ளிட்டவற்றை வெளியே அணிந்து வர வேண்டாம்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸ் என்பது விவாதத்தை கிளப்பியது. மேலும் இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கூட இந்த முடிவின் பின்னணி பற்றி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கல்ரா விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‛‛இது ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால், அது ஆண்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசவுகரியமாக இருக்கும். இதனால் ஒருவரையொருவர் மதித்து இந்த ஆடைக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இதுபற்றிய புகாரால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இருப்பினும் கூட குடியிருப்பில் வசிப்போர் இந்த நோட்டீசுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த முடிவானது 4 நாட்களுக்கு பிறகு நேற்று திரும்ப பெறப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications