பெங்களூரு சிறை அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் அடிக்கடி போனார் சசிகலா? தொடரும் பகீர்
பெங்களூரு: பரப்பன அக்ரகார சிறையைவிட்டு வெளியேறி ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் சசிகலா சென்று வந்ததாக போலீஸ் அதிகாரி ரூபா புகார் தெரிவித்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. ஆனால் சிறைவிதிகளை மீறி சாதாரண உடையில் வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு திரும்புவதை சசிகலா வழக்கமாக வைத்திருந்தார் என்பதை வீடியோ பதிவுகள் மூலம் அம்பலப்படுத்தினார் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா.

74 ஆதாரங்கள்
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் சசிகலா தொடர்பான 74 புதிய ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்தார்.

ஊழல் தடுப்பு பிரிவு
அத்துடன் அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு எப்படியெல்லாம் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தார்கள் என பெரிய புகார் பட்டியலையும் அளித்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் ரூபா தாக்கல் செய்திருந்தார்.

5 அறைகள்
சசிகலாவுக்காக பிரத்யேகமாக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன; இதில் சொகுசு கட்டில், எல்இடி டிவி, மின் அடுப்பு, பாத்திரங்கள் ஆகியவைகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் ரூபாவின் புகார்.

ஓசூர் எம்.எல்.ஏ
மேலும் பெங்களூரு சிறைக்கு அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் சசிகலா அடிக்கடி சென்று வந்ததாக ரூபா குற்றம்சாட்டியுள்ளார். சிறையின் நுழைவு வாயில் 1,2 ஆகியவற்ற்றில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருப்பதையும் ரூபா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications