உ.பி.யில் உச்சகட்ட அக்கிரமம்: பெண் நீதிபதி பலாத்காரம்- உயிர் ஊசல்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்ட சம்பவத்திற்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டும் இன்றி ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 22 வயது பெண் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் அடுத்தடுத்து பலாத்காரங்கள் நடக்கிறது. அவரோ மீடியாக்கள் தான் தனது மாநிலத்தில் நடப்பதை பெரிதுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அலிகரில் பெண் நீதிபதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மயங்கிய நிலையில் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் பாதி பாட்டில் பூச்சிமருந்து கிடந்தது. விஷமிகள் அவரை பலாத்காரம் செய்து அவருக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்து கொடுத்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதியின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications