பார்ட்டியில் தகராறு: டெல்லியில் என்.ஆர்.ஐ. வாலிபர் நண்பர்களால் அடித்துக் கொலை
டெல்லி: டெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியரான அன்மோல் சர்னா தனது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான அன்மோல் சர்னா(20). அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். ஹோட்டல் நிர்வாகம் குறித்த படிப்பு படிக்க அவர் அடுத்த மாதம் கனடா செல்லவிருந்தார்.
இந்நிலையில் கல்காஜி பகுதியில் உள்ள சவுத் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அவர் சென்றார். பார்ட்டியில் நடந்த தகராறில் நள்ளிரவு 12.30 மணி அளவில் அவர் நண்பர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அன்மோல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அன்மோலின் நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அன்மோலின் தந்தை கூறுகையில்,
நான் மருத்துவமனையை அடைந்தபோது என் மகன் இறந்துவிட்டான். அவனை படுமோசமாக தாக்கியுள்ளனர். கட்டையால் அவன் தலையை சிதைத்துள்ளனர். என் மகனை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications