எனது கட்சிக்கு என்.ஆர்.ஐக்கள் பணம் தருகின்றனர் - கேஜ்ரிவால்
டெல்லி: எனது ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராள நிதியுதவி செய்கின்றனர் என்று அக்கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
டெல்லி சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். பல்வேறு சர்வேக்கள் இதைத்தான் காட்டுகின்றன.

எங்களிடம் பணம் இல்லை. எதிர்ப்பாளர்களிடம் பணம் உள்ளது. ஆனால் எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எதற்கு வெற்றி கிடைக்கும் என்று தெரியும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று டெல்லி மக்கள் கருதுகின்றனர். எனவே நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவோம்.
தொங்கு சட்டசபை அமைந்தால் நாங்கள் காங்கிரஸையும் ஆதரிக்க மாட்டோம். பாஜகவையும் ஆதரிக்க மாட்டோம். அவர்களது ஆதரவையும் கோர மாட்டோம். ஏனென்றால் மக்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று திடமாக நம்புகிறோம்.
எங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதி ரீதியாக நிறைய உதவுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்காக நிதியளிக்கின்றனர். நீதி வெல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தாங்களாகவே முன்வந்து நிதியளிக்கின்றனர். ஹாங்காங்கில் வங்கிப் பணியில் இருக்கும் ஒருவர் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது அவர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த பணம். தனது குடும்பத்திற்குக் கூட தெரியாமல் அவர் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications