தெலுங்கானாவில் சாலை விபத்து... என்.டி.ஆரின் பேரன் பலி!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ஆரின் பேரன் ஜானகிராமன் பலியானார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவின் மகன் நந்தாமுரி ஹரிகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேச கட்சி தலைவர்களி்ல் ஒருவராக உள்ளார். இவரது மகன் ஜானகிராமன். இவர் என்.டி.ஆர்.ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா படங்களை தயாரித்து வந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்த ஜானகிராமனின் கார் மீது, டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மோதிய்து. இந்த விபத்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நலகொண்டா மாவட்டம் அகுபமலா என்ற கிராமம் அருகே நடந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ஜானகிராமன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த ஜானகிராமன் உடலுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செய்து வருகின்றனர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications