நர்ஸ் செய்த பகீர்.. சடலத்திடம்.. அதுவும் கொரோனா நோயாளியின் பிணத்திடம்.. அதிர்ச்சி அபேஸ்..!
கொரோனா நோயாளி சடலத்திடம் இருந்து செல்போனை திருடி உள்ளார் ஒரு நர்ஸ்
டேராடூன்: ஒரு சடலம், அதுவும் ஒரு கொரோனா நோயாளியின் பிணம் என்றுகூட பார்க்காமல், நர்ஸ் செய்த காரியத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.. இந்த சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது..!
தற்போது இந்தியா முழுக்க தொற்று பாதிப்பு அதிகம் இருந்தாலும்,வட மாநிலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்புகள் கூடி வருகிறது..
தொற்று எண்ணிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அதனால் இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.. அவர்களை அடக்கம் செய்ய கூட முடியாத அவலம் ஏற்பட்டு வருகிறது.

டாக்டர்கள்
எனினும் உலகம் முழுவதும் உள்ள டாக்டர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பம், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், தொற்று நோயாளிகளை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.. இந்த முயற்சியில் தங்களின் உயிரையும் இழந்துவிட்ட டாக்டர்களும், நர்சுகளும் அதிகம்..!

மிருகம்
ஆனால், இப்படி ஒரு கொடிய சூழலிலும் சிலரது குணம், மிருகத்தைவிடவும் கேடுகெட்டு போய்விடுவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அப்படி ஒரு சம்பவம்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.. ஒரு கொரோனா நோயாளியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.. ஆனால், தொற்று முற்றிப்போய், சிகிச்சையும் பலனளிக்காமல், அந்த நோயாளி இறந்துவிட்டார்.

நோயாளி
இந்நிலையில் கடந்த மே 18-ம்தேதி, இறந்துபோன நோயாளியின் மகன் அமன்தீப் கில் என்பவர் போலீசில் ஒரு புகார் தந்தார்.. அதில் என்னுடைய தந்தை இறந்துவிட்டார்.. ஆனால், அவரது செல்போனை காணவில்லை.. என்றார். இதையடுத்து, போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது, இறந்துபோன நோயாளியின் செல்போனை, சல்மான் அகமது என்பவர் பயன்படுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது..

செல்போன்
இதையடுத்து அந்த நபரை பிடித்து, செல்போன் எப்படி கிடைத்தது என்று விசாரித்தனர்.. அப்போதுதான், ருகையா என்ற நர்ஸ் பெயர் அடிபட்டது.. 21 வயசுதான் ஆகிறது.. அந்த தனியார் ஆஸ்பத்திரி ருகையா வேலை பார்த்து வந்துள்ளார்.. கொரோனா நோயாளியின் உயிர்போய்விட்டது என்று தெரிந்ததுமே, அவரது செல்போனை எடுத்து, தன்னுடைய ஆண் நண்பர் சல்மானிடம் தந்தது தெரியவந்தது.

மருந்துகள்
இதையடுத்து அந்த நர்ஸை விசாரித்தால், திருட்டு பெரிய அளவில் நடந்தது தெரியவந்துள்ளது.. உயிரைக் காக்கும் மருந்துகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளையும் அதே ஆஸ்பத்திரியில் இருந்து நர்ஸ் திருடி இருக்கிறாராம்.. இதுசம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி வருகிறோம் என்று ராஜ்பூர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.. ஆனால், மருத்துவமனை நிர்வாகம், ருகையாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது..

அதிர்ச்சி
"அந்த நர்ஸ் பொய் சொல்கிறார்.. எங்கள் மருந்துகளை பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்.. மிகவும் கடுமையான நெறிமுறைகளையும் ஆஸ்பத்திரியில் பின்பற்றுகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவரே மருந்தை திருடினேன் என்று சொல்லும்போது, அதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது வியப்பை தருகிறது.. செத்து போன நோயாளியின் சடலத்திடம் இருந்து செல்போனை திருடியது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது..!












Click it and Unblock the Notifications