ஊழியர்கள் பெயரில் கடன்.. போலி ஆவணங்களை வைத்து ரூ.50 கோடி அபேஸ்? ஒடிசாவில் சிக்கிய முக்கிய புள்ளி
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ளூர் நாளிதழை நடத்தி வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர் சௌமியா ரஞ்சா பட்நாயக் போலியான ஆவணங்களை கொண்டு ரூ.50 கோடி வரை வங்கியில் கடன் பெற்று ஏமாற்றியுள்ளதாக அம்மாநில பொருளாதார குற்ற பிரிவு போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
சௌமியா ரஞ்சா பட்நாயக், 'சம்பாத்' எனும் ஒடிய மொழி நாளிதழை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மீது அம்மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நான்கு டி.எஸ்.பி.க்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 12 அதிகாரிகள் கொண்ட மூன்று குழுக்கள் கடந்த திங்கட் கிழமை இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தின. இதற்கு காரணம் சௌமியா பட்நாயக்கின் சம்பாத் நாளிதழில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் கொடுத்த புகார்தான்.

கடந்த 2015ம் ஆண்டு போலியான ஆவணங்களை கொடுத்து வங்கி ஒன்றில் கடன் வாங்க சொல்லி இந்த ஊழியரை சௌமியாவும், இந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியுமான பைஜெயந்தியும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அந்த ஊழியர் கடன் வாங்காமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இதனையடுத்து அவர் கொடுத்த புகார்தான் தற்போது இந்த ரெய்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை பொறுத்த அளவில், "300க்கும் மேற்பட்ட சம்பாத் ஊழியர்களிடம் போலி ஆவணங்களில் வற்புறுத்தி கையெழுத்து பெற வைத்து, அதைக்கொண்டு ஒடிசா கிராமிய வங்கி, புவனேஸ்வரில் உள்ள ஐஆர்சி கிராமக் கிளையில் ரூ.50 கோடி வரை ஊழியர்கள் பெயரில் கடன் பெற்றுள்ளார்" என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த கடன் அனைத்தும் ஒரே நோக்கத்திற்காக பெறப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது வீடு பழுதுபார்க்க இந்த கடன் பெறப்பட்டுள்ளது.
300க்கும் அதிகமானோர் இதே காரணத்தை சொல்லிதான் கடனை பெற்றிருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் கடன் பெற்ற ஊழியர்களின் மாத சம்பளமும், அவர்கள் கடனுக்கு செலுத்த வேண்டிய EMI தொகையும் ஏறத்தாழ சமமாக இருந்திருக்கிறது. அதேபோல ஊழியர்கள் அக்கவுண்டில் பணம் வந்து சேர்ந்தவுடன் அது நேரடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மொத்தமாக டிரான்ஸ்வர் ஆகியுள்ளது. சில ஊழியர்கள் 2,3 முறை மீண்டும் மீண்டும் கடன் வாங்கியுள்ளனர்.
இந்த கடனுக்கான EMI கடன் வாங்கியவர்களின் பெயரில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், திடீனெ அந்த ஊழியர் அந்நிறுவனத்திலிருந்து நின்றுவிட்டால், சம்பாத் பத்திரிகை பெயரில் EMI கட்டப்பட்டு வந்திருக்கிறது. பொதுவாக ரூ.5 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கு 60 மாதங்கள் EMI கட்டப்பட்டு வந்திருக்கிறது என்று வங்கி அதிகாரிகளும், போலீசாரும் கூறியுள்ளனர். பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்த சௌமியா ரஞ்சா பட்நாயக் சமீபத்தில் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது அவரது அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் ரெய்டு நடத்தப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications