"பிஞ்சு" மாப்பிள்ளை.. இளம் மனைவிக்கு செய்த நம்பிக்கை துரோகம்.. தட்டி தூக்கிய போலீஸ்.. ஏன் தெரியுமா?
செல்போனுக்காக மனைவியை விற்ற 17 வயது சிறுவன் கைதானான்
புவனேஸ்வர்: இளம் மனைவியை இன்னொரு நபரிடம் காசுக்காக விற்றுள்ளார் புது மாப்பிள்ளை.. அந்த அதிசய கணவனுக்கு வயது ஜஸ்ட் 17 தான்.. இப்போது மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டம் டிக்ராபதா என்ற கிராமத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 17 வயதாகிறது.. இந்த சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.. அந்த பெண்ணுக்கு 26 வயதாகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை இருப்பதாக தெரிந்ததுமே, தம்பதி இருவருமே ஒடிசாவில் இருந்து கிளம்பி ராஜஸ்தான் சென்றுள்ளனர்...
வேலையிலும் சேர்ந்துவிட்டனர்.. ஆனால், அடுத்த சில நாட்களில் தன்னுடைய மனைவியை 55 வயது நபருக்கு, அந்த சிறுவன் விற்றுவிட்டான்.. அதற்கு ரூ.1.80 லட்சம் பணத்தையும் அந்நபரிடம் இருந்து பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளான்.

பெற்றோர்
இதனிடையே, ராஜஸ்தானில் இருந்து இவர்கள் ஊர் திரும்பி விட்டதாக தகவல் வரவும், பெற்ற பெண்ணை பார்க்க அவரது பெற்றோர் வந்துள்ளனர்.. அப்போதுதான் மாப்பிள்ளை மட்டும் தனியாக ஊர் திரும்பியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. மகள் எங்கே என்று மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளனர்.. அதற்கு அவரோ, அவ ஓடிப்போய்ட்டா என்று அசால்ட்டாக பதில் சொல்லி உள்ளார். இதை கேட்டு மேலும் அதிர்ந்து போன பெண்ணின் பெற்றோர் ஒடிசா போலீசில் புகார் தந்தனர்.

மீட்பு
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரும், ராஜஸ்தான் போலீசாரின் உதவியை நாடியது.. பின்னர், இரு மாநில காவல்துறையினரும் சேர்ந்து அந்த பெண்ணை தேட ஆரம்பித்தனர்.. அப்போதுதான் பணத்துக்காக மனைவியை விற்றது தெரிய வந்துள்ளது. அங்கு பலங்கிர் என்ற கிராமத்தில் அந்த பெண் இருப்பது தெரிந்து, அவரை மீட்க அந்த கிராமத்திற்கு சென்றனர்..

தகராறு
ஆனால், அந்த கிராமத்தினர் பெண்ணை அழைத்துச்செல்ல அனுமதிக்கவில்லை.. பணம் கொடுத்து பெண்ணை வாங்கியிருக்கிறோம், அதனால் அனுப்ப முடியாது என்று மறுத்து தகராறு செய்துள்ளனர்.. பிறகு பல்வேறு வகைகளில் முயற்சித்து சிரமப்பட்டு ஒருவழியாக, போலீசார் பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்... மீட்கப்பட்ட பெண் இதை பற்றி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க சொன்னதாவது:

விற்பனை
"கல்யாணமாகி 8 நாட்களுக்கு பிறகு அவர் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை இருப்பதாக சொல்லி என்னை கூட்டிட்டு போனார்.. சுமார் 2 மாத காலத்துக்கு பிறகு என்னை ஓரிடத்தில் விட்டுவிட்டு என் கணவர் எங்கோ சென்றுவிட்டார்... பிறகு தான் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு அவர் என்னை விற்பனை செய்துவிட்டார் என்பது தெரிந்தது... என்னை காசு கொடுத்து வாங்கியவர்கள் அவர்களது வீட்டிலும் வயலிலும் வேலை செய்யுமாறு என்னை கட்டாயப்படுத்தினர். அங்கு வந்த போலீசார் என்னை மீட்டு கொண்டு வந்துள்ளனர்" என்றார்.

ஸ்மார்ட் போன்
அதுமட்டுமல்ல, மனைவியை இன்னொருத்தருக்கு விற்க முக்கியமான காரணம், மாப்பிள்ளைக்கு ஸ்மார்ட் போன் மீது வந்த ஆசைதானாம்.. ராஜஸ்தானிலேயே ஸ்மார்ட் போனை வாங்கி கொண்டு, ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலியாக இருந்திருக்கிறார்.. கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு அதன்பிறகுதான் சொந்த ஊருக்கு திரும்பினாராம்.. இறுதியில், அந்த 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications